மொபைல் பிரைவசி குறித்த சாம்சங்கின் அபார சிந்தனை.. Alt Z Life தொழில்நுட்பத்துடன் கூடிய Galaxy A51, A71

 உங்களது மொபைலை யாராவது கேட்கும்போது, ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக நீங்கள் தயங்கியிருப்பீர்கள். உங்கள் மொபைலில் கேம் ஆட கேட்கும்போதோ அல்லது ஒரு நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்கலாம் என உங்கள் மொபைலை கேட்கும்போதோ, அதை கொடுக்க நீங்கள் தயங்கியிருக்கிறீர்களா? நீங்கள் தயங்கியதற்கு ஒரே காரணம், உங்கள் மொபைலில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் உங்களது தனிப்பட்ட விஷயங்களையோ தகவல்களையோ மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்பதுதான்.

இதுவரை நீங்கள் மொபைல் பிரைவசி குறித்து பயந்திருந்தால் பரவாயில்லை. இனிமேல் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். Alt Z Life தொழில்நுட்பத்தின் மூலம் உங்களது மொபைல் பிரைவசி பாதுகாக்கப்படும். இதற்கு நீங்கள் நீண்டகாலம் காத்திருக்க தேவையில்லை.

Alt Z Life தொழில்நுட்பத்துடன் கூடிய Galaxy A51 மற்றும் A71 ஆகிய மொபைல்களை அறிமுகம் செய்கிறது சாம்சங். இந்த மொபைல்களில் பிரைவசி பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக Quick Switch(குயிக் சுவிட்ச்) மற்றும் Intelligent Content Suggestion ஆகிய 2 சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த 2 சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இதுமாதிரியான ஸ்மார்ட்ஃபோன் பிரைவசியை இதற்கு முன் நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். நீங்கள் மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருக்கிறீர்கள் அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் ஃபோட்டோ கேலரியை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்களுக்கு அருகில் இருக்கும் நபர், உங்கள் மொபைலை நோட்டமிட நினைத்தால் அதை உங்களால் Quick Switch வசதியின் மூலம் முறியடிக்க முடியும். அந்த நொடி தயங்காமல் power switch- 2 முறை அழுத்தினால் போதும்.. உடனடியாக தொழில் நுட்பங்கள் சார்ந்த ஏதாவது விஷயங்கள் திரையில் தோன்றி விடும். இப்படி நமது நடவடிக்கைகளை பிறர் அறியாத வண்ணம் நாம் நேர்த்தியாக சந்தேகம் வராமல் பாதுகாக்க முடியும். அதை எப்படி செய்வது என்ற செயல்முறையை கீழ்க்கண்ட வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

Intelligent Content Suggestion உங்கள் வாழ்க்கையை இன்னும் எளிதாக்கும்.  Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய இரண்டிலுமே On Device AI என்ற வசதி உள்ளது. எவற்றையெல்லாம் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவற்றை On Device AI மூலம் உங்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும். சாம்சங் Galaxy A51 மற்றும் A71 மொபைல்கள் பிரைவசி சிறப்பம்சங்கள் மட்டுமல்லாது சிறந்த ஃபோட்டோ அனுபவத்தை வழங்கும் மொபைல்கள். quad-camera  செட்டப் உங்களுக்கு மிகச்சிறந்த, வண்ணமயமான ஃபோட்டோ அனுபவத்தை வழங்கும்.

வெளிச்சமான இடமோ அல்லது வெளிச்சம் குறைவான மங்கலான இடமோ எப்படிப்பட்ட வெளிச்சத்திலும் உங்களுக்கு மிகச்சிறந்த ஃபோட்டோக்களை வழங்கும். அந்த ஃபோட்டோக்களை பதிவிட்டால் உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுக்க முழுக்க நேர்மறையான கருத்துகளும் பாராட்டுக்களும் குவியும்..

சரியான ஃப்ரேம் செட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; நீங்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படவே தேவையில்லை. ஒரே டேக்கில் அருமையான ஃபோட்டோக்களை  பெற முடியும். நீங்கள் ஃபோட்டோ எடுக்கும்போது உங்கள் நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது டென்னிஸ் போன்ற வேகமான நகர்தலை கொண்ட போட்டிகளையோ நீங்கள் ஃபோட்டோ எடுக்க விரும்பினால் கேமரா அப்ளிகேஷனை ஆன் செய்தால் போதும். 7 ஃபோட்டோக்கள் மற்றும் 3 வீடியோக்களை உங்களால் பெற முடியும் 

Night Hyperlapse, Smart Selfie Angle, Quick Video, Custom Filter, Switch Camera(ரெக்கார்ட் செய்யும்போது), AI Gallery Zoom ஆகிய பல பிரத்யேக சிறப்பம்சங்கள் உள்ளன. எனவே Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய மொபைல்களின் மூலம் கண்டிப்பாக மற்றவர்களை விட சிறந்த ஃபோட்டோக்களை நீங்கள் எடுக்க முடியும்.

நீங்கள் உங்களது பர்ஸை வீட்டில் மறந்துவைத்துவிட்டு சென்றாலும், Samsung Pay மூலம் நீங்கள் உங்களது தினத்தை எந்த சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும். 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் Galaxy A51 மொபைல் தான் உலகளவில் அதிகமாக விற்பனையான மொபைல் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. கடும் போட்டி நிறைந்த மொபைல் விற்பனை சந்தையில், இது மிகப்பெரும் சாதனை. மிகச்சிறந்த கேமரா, நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆகியவை உங்களது வாழ்க்கையேயே மாற்றிவிடும்.

Galaxy A51 2 வடிவங்களில் கிடைக்கிறது. 6GB + 12GB, 8GB + 128GB

கல்வி,  தொழில்நுட்பம்

என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 


Related Posts:

0 comments:

கருத்துரையிடுக